Gold prices show sympathy after 4 consecutive days of inflation ...-457702660
4 நாட்கள் தொடர் விலையேற்றத்திற்கு பிறகு இரக்கம் காட்டிய தங்கம் விலை... சென்னை: அட்சயதிரிதியை கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்தாண்டு அட்சயதிரிதியை அன்றும், முந்தைய நாள் என 2 நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.856 குறைந்தது. இதனால், அட்சயதிரிதியை அன்று நகை விற்பனை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக இருந்தது. அதைத் தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.கடந்த 18ம் தேதி தங்கம் விலை கிராம் ரூ.4,739க்கும், சவரன் ரூ.37,912க்கும் விற்கப்பட்டது. 19ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 20ம் தேதியும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்கப்பட்டது. 21ம் தேதி கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4817க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,536க்கும் விற்கப்பட்டது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ...