3 பேரை தட்டி தூக்கிய திமுக! ஏக குஷியில் காங்..? பின்னணி இதான்
3 பேரை தட்டி தூக்கிய திமுக! ஏக குஷியில் காங்..? பின்னணி இதான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காலி ஆகும் இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கும். இடையில் யாரவது உறுப்பினர்கள் மற்ற தேர்தலுக்காக ராஜினாமா செய்யும் பட்சத்தில் அதற்காகவும் தேர்தல் நடப்பது உண்டு. நாடாளுமன்றத்தில் மக்களவையை கலைப்பது போல இதன் உறுப்பினர்களை கலைக்க முடியாது. மாநிலங்களவை என்பது நிரந்தர அவையாகும். ராஜ்ய சபா தேர்தல் இந்த முறை ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ராஜ்ய சபாவில் மொத்தம் 250 எம்பிக்கள் வரை இருக்க முடியும். இதில் 238 பேர் எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அது போக 12 பேர் குடியரசுத் தலைவர் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது 245 எம்பிக்கள் அவையில் இருக்கிறார்கள். நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக போகிற 57 ராஜ்ய சபா எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பதற்காவே தற்போது தேர்தல் நடக்க உள்ளது. தமிழ்நாடு எம்பிக்கள் தமிழ்நாட்டில் மொத்தம் 6 எம்பிக்கள் பதவிக்காலம் முடிவு பெறுகிறது. அதிமுகவில் நவனீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் பதவிக்காலம் முடிகிறது. இது போக திமுகவிற்...