நேஷனல் ஹெரால்டு வழக்கு- ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கிடுக்குப் பிடி விசாரணை! 155005072
நேஷனல் ஹெரால்டு வழக்கு- ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கிடுக்குப் பிடி விசாரணை! டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான விசாரணைக்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர். முன்னதாக இன்றைய விசாரணைக்கு எதிராக டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்களுடன் அமலாக்கப் பிரிவு அலுவலகம் வரை பிரமாண்ட பேரணியையும் ராகுல் காந்தி நடத்தினார். இதனால் டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகம் முன்பாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு என்ன? அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் என்பது நாட்டின் விடுதலைக்கு முன்னர் பண்டித ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதால் அதன் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹ...