மக்கள் ஹேப்பி! பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு!1031370622
மக்கள் ஹேப்பி! பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு! இஸ்லாமாபாத்: கடும் கொந்தளிப்புக்கு இடையில் பாகிஸ்தான் அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது. இதற்கு முன்னர் நான்கு முறை ஏற்றப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள் தற்போது குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் விலைவாசி உயர்வினை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சர்வதேச அளவில் ரஷ்யா-உக்ரைன் போரை காரணம் காட்டி பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பிற தெற்காசிய நாடுகள் எரிபொருளின் விலையை தொடர்ந்து அதிகரித்தன. ஆனால் கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்த போதிலும் எரிபொருட்களின் விலை குறைக்கப்படாமலிருந்தன. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இதனையடுத்து இலங்கையில் மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினர். இதன் காரணமாக அண்டை நாடுகளில் எரிபொருட்களின் விலை நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதத்தில் மட்டும் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் ...