மக்கள் ஹேப்பி! பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு!1031370622


மக்கள் ஹேப்பி! பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு!


 

இஸ்லாமாபாத்: கடும் கொந்தளிப்புக்கு இடையில் பாகிஸ்தான் அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது. இதற்கு முன்னர் நான்கு முறை ஏற்றப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள் தற்போது குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் விலைவாசி உயர்வினை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சர்வதேச அளவில் ரஷ்யா-உக்ரைன் போரை காரணம் காட்டி பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பிற தெற்காசிய நாடுகள் எரிபொருளின் விலையை தொடர்ந்து அதிகரித்தன. ஆனால் கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்த போதிலும் எரிபொருட்களின் விலை குறைக்கப்படாமலிருந்தன. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இதனையடுத்து இலங்கையில் மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினர்.

இதன் காரணமாக அண்டை நாடுகளில் எரிபொருட்களின் விலை நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதத்தில் மட்டும் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து 4 முறை அதிகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் போராட்டங்களை நடத்த தொடங்கினர். ஏற்கெனவே விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான் பாதித்திருந்த நிலையில் எரிபொருள் விலையுயர்வும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது.

இதனையடுத்து எதிர்க்கட்சியினர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் பெட்ரோல் ரூ.18.50 (இந்திய மதிப்பில் ரூ.6.99) மற்றும் டீசல் ரூ.40.54 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15.33) ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் பண மதிப்பு, பாகிஸ்தானை விட அதிகமானது என்பதால், நமது பண மதிப்பில் ஒப்பிட்டால் இது பெரிய விலை குறைப்பாக தெரியாதுதான். ஆனால் அந்த நாட்டில் இது பெரிய விலை குறைப்புதான்.

இதனிடையே,சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டபோது கனத்த இதயத்துடன் இந்த விலையுயர்வு அமல்படுத்தப்பட்டதாகவும், விலை சரிந்தபோது உள்நாட்டிலும் விலை குறைக்கப்பட்டதாகவும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக எரிபொருள் விலையை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஷெபாஸ் தலைமையிலான அரசு முதன் முறையாக மக்களின் போராட்டம் மற்றும் அரசியல் கட்சிகளின் நெருக்கடியை கருத்தில் கொண்டு விலையை தற்போது குறைக்க தொடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில் எரிபொருள் மீதான வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் அரசுக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த விலை குறைப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Comments

Popular posts from this blog