3 பேரை தட்டி தூக்கிய திமுக! ஏக குஷியில் காங்..? பின்னணி இதான்


3 பேரை தட்டி தூக்கிய திமுக! ஏக குஷியில் காங்..? பின்னணி இதான்


இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காலி ஆகும் இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கும். இடையில் யாரவது உறுப்பினர்கள் மற்ற தேர்தலுக்காக ராஜினாமா செய்யும் பட்சத்தில் அதற்காகவும் தேர்தல் நடப்பது உண்டு. நாடாளுமன்றத்தில் மக்களவையை கலைப்பது போல இதன் உறுப்பினர்களை கலைக்க முடியாது. மாநிலங்களவை என்பது நிரந்தர அவையாகும். ராஜ்ய சபா தேர்தல் இந்த முறை ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது.

 

தேர்தல்

ராஜ்ய சபாவில் மொத்தம் 250 எம்பிக்கள் வரை இருக்க முடியும். இதில் 238 பேர் எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அது போக 12 பேர் குடியரசுத் தலைவர் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது 245 எம்பிக்கள் அவையில் இருக்கிறார்கள். நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக போகிற 57 ராஜ்ய சபா எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பதற்காவே தற்போது தேர்தல் நடக்க உள்ளது.

 

தமிழ்நாடு எம்பிக்கள்

தமிழ்நாட்டில் மொத்தம் 6 எம்பிக்கள் பதவிக்காலம் முடிவு பெறுகிறது. அதிமுகவில் நவனீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் பதவிக்காலம் முடிகிறது. இது போக திமுகவிற்கு ஆர்.எஸ். பாரதி, டி.வி.கே.எஸ். இளங்கோவன், ராஜேஷ்குமார் ஆகியோரின் பதவிக்காலம் முடிகிறது. இதில் திமுக இந்த முறை 4 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

திமுக ராஜ்ய சபா எம்பி

திமுகவில் ஏற்கெனவே எம்பிக்களாக இருந்த ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்னொரு பக்கம் அதிமுக ஒரு எம்பியை இழக்கும். 2 எம்பிக்களை மட்டுமே அக்கட்சி பெற முடியும். சரி இந்த எம்பி தேர்வு எப்படி நடக்கும் என்று பார்க்கலாம். ஒரு மாநிலத்தில் எத்தனை எம்பிக்களின் பதவிக்காலம் முடிகிறது என்பதை வைத்தே இந்த நியமனம் நடக்கும். உதாரணமாக தமிழ்நாட்டில் 6 எம்பிக்கள் பதவி நிறைவு பெறுகிறது.

 

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்

இதனால் மொத்தம் உள்ள எம்எல்ஏக்கள் 234 பேரை காலியாகும் எம்பிக்கள் எண்னிக்கை 6 மற்றும் +1 கூட்டுத்தொகையால் வகுக்க வேண்டும். அதாவது 234 என்பதை 7 ஆல் வகுக்க வேண்டும். இது 33 வரும். இந்த எண்ணில் 1 ஐ கூட்ட வேண்டும். 34. இதுதான் ஒரு எம்பியை தேர்வு செய்ய வேண்டிய எம்எல்ஏக்கள் எண்ணிக்கை ஆகும். இது நேரத்திற்கு நேரம் மாறுபடும். காலியாக கூடிய எம்பிக்கள் எண்ணிக்கையை வைத்து இந்த எம்எல்ஏ பலம் மாறுபடும்.

 

இதுதான் கணக்கு

இப்போது 6 எம்பிக்கள் பதவி காலியாகிறது என்பதால் 125 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் திமுகவால் 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் உதவியுடன் கூடுதலாக இன்னொரு எம்பியை தேர்வு செய்ய முடியும். இதன் காரணமாகவே வாக்களித்தபடி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி பதவியை திமுக வழங்குகிறது. இதன் காரணமாகவே 3 எம்பிக்கள் பதவியில் ஒன்றை இழக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog