விஜய் லெவலுக்கு.. அஜித் படம் மார்க்கெட் இல்லை.. சம்பளம் மட்டும் 100 கோடியா.? கொந்தளித்த பிரபலம்.!


விஜய் லெவலுக்கு.. அஜித் படம் மார்க்கெட் இல்லை.. சம்பளம் மட்டும் 100 கோடியா.? கொந்தளித்த பிரபலம்.!


சினிமா உலகில் வெற்றியை கொடுக்க கொடுக்க ஒவ்வொரு நடிகரும் தனது சம்பளத்தை உயர்த்துவது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் அஜித் – விஜய்.

இவர்கள் இருவரும் படங்களின் மூலம்  மோதிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சமீப காலமாக இவர்கள் படங்கள் தனித்தனியாக வெளிவந்து வசூல் தள்ளுகின்றன. அப்படி அண்மையில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் அடித்து நொறுக்கியது.

அதேபோல விஜயின் 65வது திரைப்படமான பீஸ்ட். கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியது இப்படி இருக்கின்ற நிலையில் இருவருமே சற்று சம்பளத்தை உயர்த்தி உள்ளனர். அதிலும் குறிப்பாக அஜித்தின் சம்பளம் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் இப்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் கேட்டு வருகிறார்.

அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தை தொடர்ந்து வெளியான நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய படங்கள் சுமாரான வெற்றியை பெற்று இருந்தாலும் அஜித்தின் சம்பளம் மட்டும் அதிகரித்துள்ளது. விஜய் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன அதனால் அவரது சினிமா வியாபாரம் அசுர வளர்ச்சியில் உள்ளது.

ஆனால் அஜித் படங்களுக்கு அந்த அளவிற்கு வியாபாரம் இல்லை சொல்ல போனால் விஜய்யின் சம்பளம் உயரும் போதெல்லாம் அஜித்தின் சம்பளம் ஏறுகிறது தவிர அவரது படங்கள் வெற்றியை பெருமளவு வியாபாரம் ஆகவில்லை என பத்திரிகையாளர் பிஸ்மி பேசியுள்ளார். இவருடைய பேச்சை அஜித் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog