அடேங்கப்பா 18 மாவட்டங்களில் கனமழை: உங்க ஊரில் மழை எப்படி?


அடேங்கப்பா 18 மாவட்டங்களில் கனமழை: உங்க ஊரில் மழை எப்படி?


இன்று முதல் ஜுன் 3ஆம் தேதி வரையான வானிலை முன் அறிவிப்பைசென்னை வானிலைஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று ( மே 30) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவுக்கு செக்: அண்ணாமலைக்கு வழிவிடும் ஓபிஎஸ் இபிஎஸ்?

31.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01.06.2022, 02.06.2022, 03.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அதிகாரிகள் மாற்றம் முன்னே.. அமைச்சரவை மாற்றம் பின்னே? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

பெருங்கல்லூர் (புதுக்கோட்டை) 6, திருச்சி (திருச்சி), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), குழித்துறை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி) தலா 5, நத்தம் (திண்டுக்கல்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), திருச்சி நகரம் (திருச்சி) தலா 4, தக்கலை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), கோத்தகிரி (நீலகிரி), காரியாப்பட்டி (விருதுநகர்), உதகமண்டலம் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பழனி (திண்டுக்கல்), சிற்றாறு (கன்னியாகுமரி), சிவலோகம் கன்னியாகுமரி) தலா 3,

குளச்சல் (கன்னியாகுமரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), துவாக்குடி (திருச்சி), பெரியகுளம் (தேனி), காட்டுமயிலூர் (கடலூர்) தலா 2, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கொடைக்கானல் (திண்டுக்கல்), எமரலாடு (நீலகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), பொன்மலை (திருச்சி), குந்தா பாலம் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திருமங்கலம் (மதுரை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), புத்தன் அணை (கன்னியாகுமரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

30.05.2022, 31.05.2022: தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

Keto Tortillas with Almond Flour Low Carb Vegan #AlmondFlour

How To Make Easy DIY Boho Tassel Earrings