UPSC Vice- Principal: 131 துணை முதல்வர் காலியிடங்கள், முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
UPSC Vice- Principal: 131 துணை முதல்வர் காலியிடங்கள், முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
காலியிடங்கள்: 131
இடஒதுக்கீடு அற்ற இடங்கள் | பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் | இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் | பட்டியல் கண்ட சாதிகள் | பட்டியல் கண்ட பழங்குடியினர் | நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்தியனாளிகள் | மொத்தம் |
56 | 11 | 36 | 21 | 7 | 5 | 131 |
பின்குறிப்பு: டெல்லி அரசால் வழங்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி) சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும். இதர மாநிலங்களைச் சேர்ந்த ஓபிசி சான்றிதழ்கள் பொதுப் பிரிவுக்கான ஆவணமாக கருதப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்:
இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்விக்கான தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் கல்வி பட்டம் முடித்திருக்க வேண்டும்.
பணி முன் அனுபவம்: இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதுநிலை ஆசிரியராக பணி செய்திருக்க வேண்டும் (அல்லது) இரண்டு ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராக பணி செய்திருக்க வேண்டும்.
பணிக்காலம் நிரந்தரமானது.
சம்பளம்: 7வது சம்பளக்குழு ஆணை கணக்கு எண் 10-யின் படி சம்பளம் வழங்கப்படும் ( Level- 10 in the Pay Matrix as per 7th CPC ., Rs.56,100 – 1,77, 500).
வயதுக்கான தகுதி:
விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாளன்று, விண்ணப்பதாரரின் வயது 35-க்கு மேல் இருக்கக் கூடாது. இருந்தாலும்,
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.
விண்ணப்பிக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆகும்.
பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
https://upsconline.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 16.06.2022. ஆகும்.
விண்ணப்பங்களில் சமர்பிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு விண்ணப்பித்தார்கள் நேர்காணலுக்கு வரவழைக்கப்படுவர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment