எடப்பாடியே துரோகத்தை நிறுத்து.. ஜெ. நினைவிடத்தில் முழங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. ஸ்தம்பித்த மெரினா! 1034788949


எடப்பாடியே துரோகத்தை நிறுத்து.. ஜெ. நினைவிடத்தில் முழங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. ஸ்தம்பித்த மெரினா!


சென்னை: மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுச்செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

அம்மாதான் பொது செயலாளர்.. எடப்பாடியை ஏத்துக்க மாட்டோம்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் இபிஎஸ் பக்கம் சென்றுள்ள நிலையில், அதிமுக ஒற்றைத் தலைமையை அவர் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நாளை நடக்கும் பொதுக்குழு கூட்டத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் செல்ல வேண்டாம் என்று ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அங்கு, எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கக் கூடாது என்றும், துரோகம் செய்யாதே என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Keto Tortillas with Almond Flour Low Carb Vegan #AlmondFlour

How To Make Easy DIY Boho Tassel Earrings