அரசு ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு – சுற்றறிக்கை வெளியீடு!404582705


அரசு ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு – சுற்றறிக்கை வெளியீடு!


அரசு ஊழியர்கள் மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் அவர்கள் நலன் கருதி சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கை வெளியாகி இருக்கிறது.

சுற்றறிக்கை வெளியீடு:

அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பொதுமக்களுக்கு சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் வகிப்பது அரசு ஊழியர்கள் தான். அவர்களை போற்றும் விதமாக பல்வேறு வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இருப்பினும் அரசு வேலைகளில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடைபெற அரசு ஊழியர்கள் தன்னலம் பாராமல் உழைத்தனர்.

இந்நிலையில் இலங்கையில் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சம்பளமற்ற விடுமுறையில் செல்வதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டம் அரசாங்கத்தினால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தினேஸ் குணவர்தன, அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவி உயர்வு மற்றும் தரங்களை மீண்டும் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார். அவர்கள் வெளிநாடு சென்றதன் பின்னராக 2 மாதங்களுக்கு சலுகை காலம் வழங்கப்பட உள்ளது. மேலும் 3 வது மாத தொடக்கத்தில் அவர்களது பெயரில் தொடங்கப்பட்ட கணக்கிற்கு டாலர்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஒரு முதன்மை சேவை அதிகாரி மாதம் மாதம் 100 டாலர்களையும், இரண்டாம் நிலை அதிகாரி 200 டாலர்களையும், மூன்றாம் நிலை அதிகாரி 300 டாலர்களையும் , நிர்வாக அதிகாரி 500 டாலர்களையும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முதல் சம்பளமற்ற விடுமுறை அனுமதி வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog