தங்கம் விலை  பவுனுக்கு ரூ.856  உயர்வு: இன்றைய நிலவரம்1037469238


தங்கம் விலை  பவுனுக்கு ரூ.856  உயர்வு: இன்றைய நிலவரம்


சென்னை: தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.856 உயர்ந்துள்ளது.

உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர்.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் தங்கத்தில் இருந்த முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை சரிவு கண்டது. இந்தநிலையில் தங்கம் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 107 ரூபாய் உயர்ந்து ரூ.4,785-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.856 உயர்ந்து ரூ.38,280-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,472-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 10 பைசா குறைந்து ரூ.65.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.65,000 ஆக உள்ளது.

Comments

Popular posts from this blog