2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது ஹஜ் யாத்திரை!1009128174


2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது ஹஜ் யாத்திரை!


2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது ஹஜ் யாத்திரை... அராஃபத் மலையில் 10 லட்சம் பேர் தொழுகை மேற்கொண்டனர்!

உலகம் முழுதும் முடக்கி போட்ட கொரோனா வைரஸால்  கடந்த இரண்டு வருடங்களாக எந்தவிதமான குழு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. 

இதன் காரணமாக இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் யாத்திரைக்கு அரபு அமீரகம் இடைக்கால தடை விதித்திருந்தது. 

இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுதும் குறைந்திருக்கிறது மற்றும் அதற்கான தடுப்பூசியும் செலுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, இந்த ஆண்டு மீண்டும் ஹஜ் யாத்திரைக்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுமதியளித்துள்ளது. 

இதன் பிறகு, வழக்கம் போல் உலகின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ்  யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். 

இதன் முக்கிய நிகழ்வாக, புனித ஹஜ் பயணத்தின் ஒரு பகுதியாக மெக்கா அருகே உள்ள அராஃபத் மலையில் 10 லட்சம் பேர் வெள்ளை அங்கி அணிந்தபடி தொழுகை மேற்கொண்டனர்.

கொரோனா பரவல் குறைந்து வருவதால் உலக நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மெக்காவில் குவிந்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து, முஸ்தலிஃபா செல்லும் அவர்கள் கற்களை சேகரித்து, ஜமராத் எனப்படும் " சாத்தான் மீது கல் எறியும் சடங்கை" நிறைவேற்றுகின்றனர்.

Comments

Popular posts from this blog

Keto Tortillas with Almond Flour Low Carb Vegan #AlmondFlour

How To Make Easy DIY Boho Tassel Earrings