கேரளாவில் மற்றொரு நபருக்கு மங்கி பாக்ஸ்! அச்சத்தில் இந்திய மக்கள்34980467


கேரளாவில் மற்றொரு நபருக்கு மங்கி பாக்ஸ்! அச்சத்தில் இந்திய மக்கள்


கேரளாவில் மேலும் ஒருவருக்குக் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 31 வயதான அந்த நபர் துபாய் நாட்டில் இருந்து திரும்பியவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட மங்கி பாக்ஸ் பாதிப்பு கேஸ்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஜூலை 13இல் துபாயிலிருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருக்கு மங்கி பாக்ஸ் அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது. காய்ச்சல், தசைவலி, கொப்பளங்கள், சளி ஆகியவை இந்த மங்கி பாக்ஸின் பொதுவான அறிகுறிகளாகும்.

Comments

Popular posts from this blog