பட்டாசு வெடித்து தரை மட்டமான வீடு- 6 பேர் பலி!581972200


பட்டாசு வெடித்து தரை மட்டமான வீடு- 6 பேர் பலி!


பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் வீடு தரைமட்டமாகி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் உள்ள குதாய் பாக் கிராமத்தில் சபீர் குசைன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்கத் தொடங்கின. இதில் அந்த வீடு தரைமட்டமானது. வீட்டிலிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

 சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வெகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும் படுகாயங்களுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடுபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதால் அவர்களை மீட்க போலீசாரும், தீயணைப்பு  வீரர்களும்  தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வெடி விபத்தில் தரைமட்டமான வீட்டிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தாக  அப்பகுதி மக்கள் கூறினர். வெடி விபத்தில் வீடு தரைமட்டமாகி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

PlayStation 4 Users Can Download A Special Freebie Right Now #RightNow

Eye Candy Pinterest Favorites This Week