ஆடம்பர வாழ்க்கை!! இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி கைவரிசை!!1763955475


ஆடம்பர வாழ்க்கை!! இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி கைவரிசை!!


தமிழகத்தைப் பொருத்தவரையில் கடந்த சில நாட்களாக காதல் ஜோடிகள் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வயதானவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்கும் இன்ஸ்டாகிராம் காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை அடுத்த பொம்மணாம் பாளையம் கிராமத்தில் இளைஞர் ஒருவர் புத்தகத்துடன் முதுகில் பை ஒன்றை மாட்டிக் கொண்டு இளம்பெண்ணுடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 80 வயதான பெரிய ராயப்பன் என்ற மூதாட்டியின் வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மூதாட்டியை பின்தொடர்ந்த காதல் ஜோடிகள் வரை மடக்கி பிடித்து இருகைகளையும் கட்டி , வாயில் பிளாஸ்டரை சுற்றி சமையல் அறையில் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் வீட்டில் கிடைத்த பொருட்களுடன் தப்பிச்செல்லும் போது சங்கீதா என்ற பெண்மணி பார்த்துள்ளார். உடனே திருடன் திருடன் எனக் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் திரண்ட ஊர் பொதுமக்கள் காதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தது மட்டுமல்லாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திருடியது தினேஷ்குமார் என்பது முதற்கட்ட தகவலில் வெளிவந்தது.

மேலும், வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளீர்கள்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கைக்காக காதல் ஜோடி கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

Keto Tortillas with Almond Flour Low Carb Vegan #AlmondFlour

How To Make Easy DIY Boho Tassel Earrings