அஞ்சல் துறையில் 40,000 போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள்: பெண் தேர்வர்களுக்கு ஏன் வெற்றி வாய்ப்பு அதிகம்! நாடு முழுவதும் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 40,889 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10ம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை கட்டாயப் பாடங்களாகவோ அல்லது விருப்பப் பாடங்களாகவோ எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு: இந்த காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சிப் பட்டியலில், மதிப்பெண்களு...